ஞாயிறு, 9 அக்டோபர், 2016

காக்க காக்க !!!

வருத்தம் மறக்க ! 
வார்த்தை தவிர்க்க ! 
வாதம் விலக்க ! 
வாழ்க்கை இனிக்க ! 
காக்க காக்க !!!

திங்கள், 25 ஜூலை, 2016

முயற்சி !!!

முடியாதென்று, 
சொல்கையில் 
முயற்சி தோன்றினாலும், 
கேட்கையில் 
வறட்சி தோன்றாதல் நன்று !!!

செவ்வாய், 14 ஜூன், 2016

என்னுரை!!

என்னை எனக்கு எடுத்துரைக்க
முன்னுரை தேவையில்லை !
என்னை நான் எடுத்துரைக்க
என்னுரை போதவில்லை !!

சனி, 30 ஜனவரி, 2016

நினைவில் !!!

நாம் நினைத்ததை
நடத்தப் பார்ப்பதும்,
நடந்ததை நாம்
நினைத்துப் பார்ப்பதும்,
நினைவில் நிக்கலாம் !
நிகழ்வில் நில்லாது !!

வியாழன், 21 ஜனவரி, 2016

வெறுமை !!

உன் செவிகள் அனைவரது
வார்த்தைகள் கேட்க இருப்பின்,
உன் வார்த்தைகளுக்கு
செவிகள்  தேடுவது
வெறுமை !!

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஆதலால்!

உள்ளம் உணர்ந்ததால்,
உருவம்  உதாசீனப்பட்டது;
புன்னகை  புரிந்ததால்,
கோபம் ஆட்கொள்ளப்பட்டது;
ஆதலால்!  உன்னால்!
என்னால்!  நம்மால்!
காதல், காமத்தை வென்றது!!!

வியாழன், 17 டிசம்பர், 2015

அனுபவம் !

சம்பாத்தியம், சாமர்த்தியம் அல்ல;
சேமிப்பே! கவனிப்பை பெறுகிறது !!!


வாழ்க்கையை!
நிகழ்வுகளும், நபர்களும்
வெறுக்கச் செய்தாலும் !
நிஜங்களும், நன்மைகளும்
ரசிக்க வைத்திடும் !!!

வார்த்தையின் வலுவும்,
துரோகத்தின் துருவும்,
அன்பினாலே ஆறும் !
அரவணைப்பில் ஆறுதல் அடையும் !!

நிறையில்லா அனைத்தும் குறையல்ல !!!

நிறைவேறாத ஆசைகளை காட்டிலும்
கேட்கப்படாத ஆசைகளே நிராசையாய்
நின்று விடுகிறது !!!

திரும்பியவர்கள் எல்லாம் திருந்தியவர்கள் இல்லை; திருந்தியவர்கள் எல்லாம் திரும்பியவர்களே !!!

என் தோல்விக்கு நானே பொறுப்பு, ஆனால் நான் மட்டுமே காரணம் இல்லை !!