அந்த, நீல வானத்தின் மேல்
என்ன என்னமோ இருக்கிறது ,
இருப்பதாக இருக்கிறது
விஞ்ஞானியின் பேச்சு,
இந்த நீல வானத்தின்
கீழ்நாம் இருவரும், இருவர் மட்டுமே
இருப்பதாக நினைக்கிறது
இச்சாமானியனின் மூச்சு !
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
சிலந்தியின் வலையினைப் போல்
சிதறல்களாய் கனவினை சேர்க்கும்
அப்பாவிகளாய் நாம் இருக்கையில்,
இருந்த இடத்தில் இறையினை
இழுத்துவிடும் தவளைகளை
மேதாவிகளாய் போற்றிடும் உலகம்!