sindhanai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sindhanai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2012

வீர‌ன் !!!

கோழை,
த‌வ‌ற‌ விட்ட‌தை எண்ணி த‌விப்பான்;
முட்டாள்,
த‌வ‌ற‌ விட்ட‌தை அறியாம‌ல் நிற்பான்;
அதிர்ஷ்ட‌சாலி,
வெற்றிய‌டைந்து பின் மிதப்பான்;
வீர‌ன்,
வாழ்வின் அடுத்த‌ ச‌வாலை ச‌ந்திக்க‌ முய‌ல்வான்!!!

திங்கள், 16 ஜனவரி, 2012

த‌வ‌று ?

த‌வ‌று,

பார்ப்ப‌வ‌ரால் சொல்வ‌தா?
செய்த‌வ‌ரால் உண‌ர்வ‌தா?
வ‌குத்த‌வ‌ரால் வ‌ர்ணிப்ப‌தா?

த‌வ‌று,
செய்ததை சுட்டிக்காட்ட‌வா?
அறியாமையை அறிவுறுத்த‌வா?
செய்ய‌க்கூடாவ‌ற்றை உண‌ர்த‌வா?

செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஆசையே அலை போலே!!!

கரை தேடி வருகிறாய்
கரை தொட்ட  பின்
நுரையாகி போகிறாய்
நீயும் என் தோழனே!

அடைந்துவிட்டோம் என்றாசை,
அடைந்ததும் நிராசையானது;

அறிந்தது கல்லளவு,
அறியாதது உலகளவு,
என்றதை உணர்ந்ததும்;
ஆசையே அலை போலே!!!

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

வினா ஓர் க‌னா....!!!

சில‌ வினா விடையாக‌லாம் ;
சில‌ வினா ஆச்ச‌ரிய‌ம் ஆக‌லாம் !
சில‌ வினா வின‌வாம‌ல் போக‌லாம் ;
சில‌ வினா விட‌ முடியாம‌ல் போக‌லாம் !!
சில‌ வினா என்றும் ஓர் க‌னா....!!!

செவ்வாய், 25 அக்டோபர், 2011

உண்மை !!!

என்ன‌ தான் வாழ்க்கை
என்று இருந்த‌ போது இருந்த‌து ஆன‌ந்த‌ம்.....

இது தான் வாழ்க்கை
என்று‌ உண‌ர்ந்த‌ போது இருந்த‌து ம‌கிழ்ச்சி...

இது தானா வாழ்க்கை
என்று அறிந்த‌ போது இருந்த‌து ச‌லிப்பு....

என்ன‌ டா வாழ்க்கை
என்றான‌ போது தேவை இருந்த‌து நிம்ம‌தி......

புதன், 14 செப்டம்பர், 2011

நேற்று இன்று நாளை !!!

நாளை துலைந்த‌து என்று
ப‌த‌றும் மானிடா,
அதை துலைத்த‌து நீ தானே
இன்றைய‌ ச‌முதாய‌த்தில்
நேற்றைய‌ பார‌ம்ப‌ரிய‌த்தை!!!

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுத‌ந்திர‌ தின‌ வாழ்த்துக்க‌ள்....

அகிம்சையின் ப‌ல‌த்தை பார்த்த‌தில்லை,
அத‌ன் ப‌ல‌னால் ப‌ய‌ன‌டைந்தோம் ;
ஆண்டுக‌ள் ப‌ல‌ க‌ட‌ந்த‌ன‌,
உல‌கம் தூங்கும் போது
நாம் சுத‌ந்திர‌ம் அடைந்தோம் என்ற‌ன‌ர்,
அத‌ன் க‌லைப்பில் ம‌க்க‌ள் தூங்கும் போது
அர‌சிய‌ல் குள்ள‌ ந‌ரிக‌ள் விழித்த‌ன‌ர்
ம‌க்க‌ளை ம‌ந்த‌மாக்கி
அவ‌ர்க‌ள் ம‌ன்ன‌ராக‌ நினைக்கின்ற‌ன‌ர்,
விட‌வேண்டாம் ந‌ம் விடுத‌லையை,
சுதாரித்து கொள்வோம் சுத‌ந்திர‌ம் சூரையாகும் முன்,
இச்சுத‌ந்திர‌ தின‌த்தில் சூளுரைப்போம்,

சுத‌ந்திர‌ தின‌ வாழ்த்துக்க‌ள்....

சனி, 6 ஆகஸ்ட், 2011

"ந‌ண்பேன்டா"!!!

ம‌ந்தையில் சென்றாலும்
விந்தை நிக‌ழ்திடுவோம் !
சிந்தையினில் ஒற்றுமை...
ஒற்றை வார்த்தையினில்
எங்க‌ள் வாழ்க்கை "ந‌ண்பேன்டா"!!!

ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்..

புதன், 27 ஜூலை, 2011

வாகை சூடவா!!!

கண்ணில் கண்ட பாதைகள் மெய்யானதா?
கால்கள் சென்று தோற்றதால் பொய்யானதா?

கண்ணில் கண்டிடும் எழுத்துக்கள் மெய்யானதா?
செவியினில் கேட்டிடும் மெய்யின்மையால் பொய்யானதா?

கண்ட பாதையும் எழுத்துக்களும் மெய்யானதே,
வென்றிடாத பாதையில் சென்ற கால்கள் பொய்யா?
மெய்யான வார்த்தைகள் கேட்டிறாத செவிகள் பொய்யா?

சோதனைகள் அனைத்தும் சாதனைகள் ஆகிவிட்டால்
சாதனைகள் அனைத்தும் சாதாரணமே,
சரித்திரத்தில் சாதனைகள் மட்டுமே இருந்துவிடில்,
சரித்திரம் வெறும் உயிரில்லா ச‌ரீர‌ம் போலே,
பயன் ஏதுமில்லை !!!

வெற்றி என்பது மையம்
என மையம் கொள்ளாமல்,
மைற்க‌ல்லாய் கடந்து வந்து
வாகை சூடவா!!!

செவ்வாய், 31 மே, 2011

ஊடல் !!!

ந‌ட்பினில் பிரிந்தோம் சேர்ந்தோம் சிரித்தோம்!
'உற‌வினில் பிரிந்தோம் ச‌ந்திப்போம் சிந்திப்போம் !!
ந‌ட்பினில் ஊட‌ல் த‌ண்ணீரில் க‌ல‌ந்திடும் உப்பாகும் ,
உற‌வினில் ஊட‌ல் உப்புத் த‌ண்ணீரை
சுவைப்ப‌து போல் க‌ச‌ந்து விடும் !

வெள்ளி, 20 மே, 2011

என்ன‌ வாழ்க்கை டா இது!!! - 2

க‌னா காணும் கால‌ங்க‌ள்
க‌ணிணி கால‌ம் ஆன‌து;
க‌னிக‌ள் விளைந்திடும்
நில‌மோ கால‌மான‌து;

உற‌வுக‌ள் உலோக‌மாய் உருபெற்ற‌து,
பொன்னும் பொருளும் ம‌திப்பெற்ற‌து
ம‌னித‌ர்க‌ள் ம‌திப்ப‌ற்ற‌ ம‌ர‌மாயீன‌ர்;

இணைய‌த்தின் இம்சைக‌ள்
இம‌ய‌ம் தொட்ட‌து;
மென்பொருளை க‌ற்ற‌ன‌ர்,
ம‌னித‌ நேய‌த்தை ம‌ற‌ந்த‌ன‌ர்;

வாழ்க்கையை வாழ்வோம் என்று
வாலிப‌ம் வ‌ற‌ண்டோடுது,
வாழ்ந்திடுவோம் வாழ்வினை
வென்றிடுவோம்!!!

என்ன‌ வாழ்க்கை டா இது!!!

புதன், 13 ஏப்ரல், 2011

வாக்க‌ளிப்போம் !!!


அவ‌ நிலையா ? அவ‌ச‌ர‌ நிலையா ?
த‌மிழ் நாட்டின் த‌லைவிதியா?
த‌மிழ‌னின் த‌லையெழுத்தா?

ஈழ‌னை ஈச‌னின் கொடுத்தோம் !
நாட்டினை குள்ள‌ நரிக‌ளிட‌ம் கொடுத்தோம் !!
அர‌சிய‌ல் ஆழ்க‌ட‌லை
ச‌த்திய‌ம் செய்து சாக்க‌டை ஆக்கின‌ர் !!!

வார‌த்தில் அனைத்து தின‌த்திலும்
க‌ருப்பு நாள் அனுச‌ரிக்கிறோம்,
வ‌ருட‌த்தில் அத்துனை நாட்க‌ளும்
ஆகாம‌ல் பார்த்துக் கொள்வோம்,

வாக்க‌ளிப்போம் !!!

வியாழன், 31 மார்ச், 2011

ஆயுத‌ம் !!!

ஆய‌த்த‌மான‌வ‌னை ஆயுத‌மாக்கும்,
ஆத்திர‌கார‌னை ஆட்கொள்ளும்,
ஆத‌ர‌வ‌ற்ற‌வ‌னுக்கு ஆத‌ர‌வாகும்,

அஹிம்சை ஹிம்சையாகும் போது
அமைதி காக்க‌வும்,
ச‌ட்ட‌ம் சாக‌டிக்க‌ப்டும் போது
ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌வும்,

ஆய‌த்தமாகும் ஆயுத‌ம் !!!

செவ்வாய், 8 மார்ச், 2011

உல‌க‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்கள்...

என்னை,
ஆக்கி வைத்து, ஆள‌ வைத்து
ஆட் கொண்டிருக்கும், கொள்ள‌ போகும்
ஆர‌ம்ப‌த்தின் ஆணிவேரே,
ம‌கிமையே ம‌க‌ளிரே...
உல‌க‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்கள்...

திங்கள், 7 மார்ச், 2011

ஆசை !!!

த‌வ‌றை,
ம‌ற‌ப்ப‌தில் ம‌ழலையாய்;
ம‌ன்னிப்ப‌தில் பெரிய‌வ‌னாய்;
உண‌ர்வ‌தில் அறிஞ‌னாய்;
அத‌னை செய்கையில், நான் நானாய்
இருந்திட‌ ஆசை !

வெள்ளி, 4 மார்ச், 2011

இனிமை

நாவினில் உச்ச‌ரித்த‌வையெல்லாம்
மொழி என்பது ம‌ட‌மை;
நாவினை உச்ச‌ரிக்க‌ வைப்ப‌வையே
தாய் மொழியின் ம‌கிமை;
எங்க‌ள் செம்மொழியின் இனிமை !!!

புதன், 15 டிசம்பர், 2010

கை !!!

என்னை பெற்ற‌வளின் கையை
நான் பிடித்து ந‌ட‌ந்தேன்,
என்றும் உட‌ன் இருப்பேன்
என்று அவ‌ள் நெகிழ !

என்னை ஏற்ற‌வ‌ளின் கை
என்னை பிடிக்க‌ ந‌டந்தேன்,
என்றும் துணை இருப்பேன்
என்று அவ‌ள் ம‌கிழ‌!!!

வியாழன், 15 ஜூலை, 2010

கொண்டாடுவோம் குதூகலிப்போம் !

யாதும் ஊரே யாவரும் கேளிர் ,

சொன்னது யாரு அதை புரிவது யாரு

நாம் மட்டும் அதை அறிந்தோமா

இல்லை புரிந்தோமா ?

ஆனால் வாழ்தோம்

கேளிக்கையுடன் கேளிராய் ,

சண்டை போட்டு சகோதரனாய்

சச்சரவுகள் இருந்தும்

நாம் மாமன் மச்சான்கள் !


கல்லூரி சாலையில் நாம்

கால் பதித்து,

எட்டு ஆண்டுகள் கழிந்தாலும்

எட்டு திக்கும் அதன் நினைவுகள்

மகிழ்ச்சியை வென்சாமரமாய் வீசுகிறது ;


நினைவுகள் நினைப்பதற்கே ,

சுகமான கல்லூரி நினைவுகளை

இந்நாளில் எந்நாளும் நினைத்து

கொண்டாடுவோம் குதூகலிப்போம்!

(ஜூலை , 15, 2002, நாங்கள் கல்லூரியினில் கால் பதித்த தினத்தின் கொண்டாட்ட சிதறல் )