kaadhal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kaadhal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 மார்ச், 2012

எத‌ற்கு!!!

எண்ண‌ங்களை எரித்திட‌ எண்ணி
என்னையே எரித்தேன்,
என்ன‌வ‌ளின் எண்ண‌மில்லாம‌ல்
எந்த‌ன் எச்ச‌ம் எத‌ற்கு!!!

செவ்வாய், 29 நவம்பர், 2011

அலைக‌ளின் அறித‌ல் !!!

போகிற‌ போக்கில்..
உன் பெய‌ரை க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில்
எழுதினேன்!
அலைக‌ளும் அறிந்துள்ளது
நீ என‌க்கான‌வ‌ள் என்று ;
உன் பெய‌ரால் பெருமை ப‌ட்ட‌
ம‌ண‌லை என்னிட‌ம் வ‌ந்து சேர்க்கிற‌து!!

சனி, 12 நவம்பர், 2011

என்னில் நீ !!!

நான் சொல்கையில் உண‌ர்வு,
நீ சொல்கையில் நிறைவு !
என்னில் நான் த‌னிமை,
என்னில் நீ அருமை !!
உன் ம‌னதை உண‌ர்வேன் ,
உன் சொல்லால் ம‌கிழ்வேன் !
உன‌க்காக‌ எதையும் துற‌ப்பேன்,
என்றும் உனை ம‌ற‌வேன் !!!

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

அழகி !!!

உல‌கின் அழ‌கியாக‌ திற‌மைக‌ள்,
சோத‌னைக‌ளும் ப‌ல‌ தேவை ;
எந்த‌ன் அழகியாக‌
திற‌மைக‌ள் எத‌ற்கு?
சோத‌னைக‌ள் தான் எத‌ற்கு?
எந்த‌ன் அழ‌கியாக‌
நீயாக‌ ம‌ட்டும் இருக்க‌ வேண்டும்!