புதன், 22 ஜூன், 2011
பயமறியான்!!!
உனை கண்டு லயித்தன;
கை தொடும் தூரத்தில் இருக்கிறாய்
உனை கண்டு பயந்தன;
நானோ இதனை பயம் என்று அறியாதவனாய் !!!
ஞாயிறு, 19 ஜூன், 2011
முதல் முறை !!!
பிரிய நினைத்தேன்,
எந்தன் இமைகள் உன்னை கண் கொள்ள...
களவாட துடித்தேன்,
உன்னை எனக்கு...
வீழ்ந்திட யாசித்தேன்,
உன்னுடன் வாழ்ந்திட...
வாழ்ந்திட நேசித்தேன்,
உன்னுடன் எந்தன் வாழ்வினை...
யாசித்து நின்றேன்,
உந்தன் கைகள் பற்றிட...
நீயே என்னவள் என்றுணர்தேன்
உன்னை பார்த்ததும்...
தலைகுனிய போனேன்
வேறு பெண்ணை பார்த்ததும்...
அனைத்தும் முதல் முறை...
உன்னை முதல் முறை பார்த்ததும்....
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
உணர்வு
நாமும் மனிதர் என்ற உணர்வினை,
நீ தொட்டதும் சிலையானேன்
உன்னை மட்டும் ரசிக்கும் உணர்வினால் !!!
புதன், 9 பிப்ரவரி, 2011
நொடி
உன்னை பார்த்த ஒரு நொடி போதும் !!
அதன்பின்
உன்னை நான் மறக்க
இந்த வாழ்வினில் ஒரு நொடியும் இல்லை !!!
புதன், 24 நவம்பர், 2010
மூச்சு!
என்ன என்னமோ இருக்கிறது ,
இருப்பதாக இருக்கிறது
விஞ்ஞானியின் பேச்சு,
இந்த நீல வானத்தின்
கீழ்நாம் இருவரும், இருவர் மட்டுமே
இருப்பதாக நினைக்கிறது
இச்சாமானியனின் மூச்சு !
திங்கள், 27 செப்டம்பர், 2010
நிலவை பிடித்தேன் !!!
நிலவே உன்னை பின்தொடர்ந்து
எந்தன் வீட்டினில் சேர்த்து அனைப்பேன் ; ஆனால்
ஆதங்கப்பட்ட ஆதவன் உதித்து
உன்னை பறித்து கொள்வான் ;
சற்று வருந்துவேன் மீண்டும்
மாலை வரும் வரையினில் ;
இனி வருந்தப் போவதில்லை ,
நிலவு எனை பிரியப் போவதில்லை ;
மனையாளாய் எந்தன் மனை ஆள்கிறாள் !!!
புதன், 22 செப்டம்பர், 2010
அளவுகோல்
அளவுக்கு மிஞ்சிவிடில்
அமிர்தமும் நஞ்சாகுமே !
உந்தன் மீது நான் வைத்த
அளவினை கடந்த அன்பு
என்னுள் நான் என்ற
அகந்தையினை நசுக்கி விட்டது !
நான் வைத்த அன்பு
உந்தன் மேல் என்பதால்
அளவுகோலும் அளப்பதை மறந்தது !
செவ்வாய், 7 செப்டம்பர், 2010
மழையோடு ஓர் பொழுது !
என்னவளுடன் எண்ணற்ற பொழுதுகள் ,
உன்னுடன் இந்த பொழுது !
அவளிடமும் சொன்னதில்லை
நீ தான் என் முதல் காதலி என்று,
கோவித்துக் கொள்வாள் கள்ளி ;
உங்கள் இருவருடனும் ஒரே சமயத்தினில்
காதல் செய்திட எண்ணிய ஆசை தீர்ந்தன ,
இந்த பொழுதினில் ;
உன் முதல் துளி
என்னை தழுவியதும் - மெய்சிலிர்த்தேன் ;
நானும் உன் பின்
வந்துவிடுவேனோ என்ற அச்சத்தினால்
அவளை மறந்து என் கை பிணைத்தாள்,
பிறகென்ன நானும் எனை மறந்தேன் ;
நீ என் மேனி தழுவ ,
அவள் அன்பு என் உள்ளம் தழுவ ,
விலை மதிப்பில்லா பொழுதின் சொந்தக்காரன் ,
கர்வத்தில் கர்ஜித்து ,
வினாடியும் வீணடிக்க விருப்பமில்லை ,
ஓர் குடையினில் கீழ் நடந்திருந்தால்
கவனம் சிதறி இருக்கும் , மழை துளி
அவள் மேல் படாமல் தடுப்பதில் ;
நான் ரசித்தவள் எனை அணைக்க ,
நான் நேசித்தவள் என் கை பிணைக்க ,
எங்கள் பாதங்கள் நடை பயின்றன !
இதே நொடி என்றாவது கிடைக்கலாம் ,
கிடைத்த இந்த நொடி எனக்கான பரிசு ,
பொக்கிஷம் என்று உயர்த்தி இருப்பேன் - ஆனால்
அது வாழ்வில் ஒரு முறை கிடைப்பது !
பல பொழுதுகளை ஏங்கும் நெஞ்சத்துடன்
விடை கொடுக்கிறேன்
நீ மீண்டும் வருவாய் என !
வியாழன், 6 மே, 2010
என் உயிரானவள் !
எனக்கு பயணம் புதிதல்ல ,
தூரம் கண்டு அச்சம் இல்லை ,
சற்று சலனம் நீ இன்றி பயணிக்க ;
உன்னை அறிந்த பின்பு !
என் பாதையில்
முட்கள் இருப்பினும்
என்னுடன் வர சம்மதித்தாய் !
இனி நீ இன்றி
வாழ்க்கை பயணிப்பதில்
அர்த்தம் யாம் அறியேன் ,
உன்னை அறியும் முன்பும் பயணித்தேன்
உன்னை காணும் நாளை எண்ணி ,
அதில் ஓர் சுகம் !
இன்று உன்னை நினைத்து
பயணிக்கையிலும் ஒரு சுகம்
ஆனால் அதனை உணர மறுக்கிறேன் !
கடவுள் இல்லை என்றில்லை,
இருந்தால் சுகம், என்று
உரைக்கு மாற்றுரை வழங்க
நான் நாத்திகன் இல்லை !
இருக்கும் இருக்கலாம்
என்று மூடனாய் நம்பிக்கை
கொள்ள ஆத்திகனும் இல்லை !
உயிர் உள்ள வரை
இதய துடிப்பு
நீ உள்ள வரை நான் !
என்றிருக்கும்
எனக்கு உயிரானவள் நீ !
சனி, 17 ஏப்ரல், 2010
பெருமை !!!
எந்தன் பெயரை உரிமையுடன்
நீ அழைத்ததோ அருமை !
உந்தன் தோழி எனை யார்
என்கையில் நீ புன்னகைத்ததும்
என் நெஞ்சில் ஓர் பெருமை !!
வெள்ளி, 16 ஏப்ரல், 2010
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
வினாவானேன் !
கேள்வியாக இருந்த போது,
விடையாய் வந்தாய் !
பலர் எனை எதிர்த்தனர்
நான் உன்னை
எதிர் பார்த்தால் !
உன்னை கண்டதும்
எனை இழந்தேன்
என்னிடமிருந்து !
அன்று உன்னால் லயித்த
காரணம் என்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீ இருப்பதால் !
எதிர்பார்க்கவில்லை நீ
எனை பிரிவாய் என , கனவிலும்
காணவில்லை !
இன்று என்னை பிரிந்த
காரணம் உன்னிடம் இல்லை
தேவையும் இல்லை நீயே சென்ற பின் ;
வாழ்வின் விடை கண்ட பின்
என்னை அதன் வினாவாக்கினாய்
என்னுள் நானே வினாவானேன் !
செவ்வாய், 16 மார்ச், 2010
உனக்காக பிறந்தவன் !
என் உயிரில் கலந்தாய் ;
கலந்தது என் உயிர் என்றாலும்
என் நினைவில் நிறைந்தாய் ;
நினைவில் நிறைந்திருப்பினும்
என் கண்கள் உனையே தேடின;
கண்கள் உன்னை தேடுகையில்
என் உதடுகள் உன் பெயரையே உச்சரித்தன ;
உதடுகள் பெயரை உச்சரிக்கையில்
என் கைகள் இதனை சிதறின நீ படிப்பாய் என ;
நீ இதனை படிக்கையில்
என்னை அறிந்திருப்பாய் ;
அறிந்ததும் உணர்ந்திருப்பாய்
உனக்காக பிறந்தவன் என்று !
சனி, 6 மார்ச், 2010
ரசிகன் ஆனேன் !
அவள் வருகைக்கு !
என் விழி எங்கும் அவள் பிம்பம் ;
சற்றே கவனித்தேன் ,
அவள் பாதம் படவே வழியும்
எங்கும் ஏங்கி இருந்தது !
வியந்தேன், மகிழ்ந்தேன் !
அவள் வருகைக்கு காத்திருந்த
நிமிடமும் யுகமானது ஆயினும்
அந்த யுகம் முழுவதும்
அவளை நினைத்து கொண்டிருப்பதால்
அதையும் ரசித்தேன் !
ரசிகன் ஆனேன் !
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
எவரும் இலர் !
உன்னை கண்டேன் என்றிருந்தேன் ,
ஆயின் ,
என்னை நினைக்க தவறியது
என் உள்ளம், உன்னால் கவர்ந்து ;
பல கோடி கவிதைகள் சிதறியது
என்னிடம், - உனக்காக ;
அதை படித்ததும் பதறலாம்,
இக்கிறுக்கனின் கவிதையும்
பல கவிஞர்களின் கவிதை
போல் உள்ளதென !
இருக்கலாம், நான் ஒன்றும்
தமிழ் அறிஞன் அல்ல
நான் உன்னை அறிந்தவன் ;
அவர்களை போல் நானும்
காதலை சொல்லி இருக்கலாம் ;
ஆனால்
என்னை போல் உன்னை காதலிக்க
எவரும் இலர் !
ஞாயிறு, 10 ஜனவரி, 2010
ஒற்றை வார்த்தை !!!
ஒற்றை வார்த்தை
கவிதையானது
உந்தன் பெயர் எனக்கு !
அன்பே !
என்னை முற்றிலும்
ஆக்கிரமித்த ஒற்றை
உயிர் நீயடி !
சகியே !
உலகினில் காதலை சொல்ல
வார்த்தைகள் பல தேவைப்படுகையில்
"காதலிக்கிறேன்" என்ற ஒற்றை வார்த்தை
போதுமடி எனக்கு !
ஆம் ,
நான் காதலிக்கிறேன்
என்ற போது,
உன்னை தவிர வேறு
யாராக தான் இருக்க முடியும் !
ஒற்றை வார்த்தையில்
என் ஒற்றை வாழ்க்கையை
சொல்லிவிடுகிறேன் "நீ" என்று !
புதன், 23 டிசம்பர், 2009
நினைத்தாலே இனிக்கும் !
பாண்டியனுக்கு கிடைத்த பாக்கியமும்
எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால் !
உன் கூந்தலின் மணத்தை நுகர்ந்ததில்லை
ஆனால் உன் கூந்தல் என்னை உணர்ந்தது
வாயு பகவானின் திருவிளையாட்டால் !
உட்புற ஆடைகளே மேலாடையாகும்
இக்காலத்திலும் உன் தாவணி
என்னை தழுவிய போது
என் இதயமும்
என்னிடம் இருந்து நழுவியது !
காதல் என்ற பெயரால்
காண்போரை முகம் சுளிக்க
செய்யும் சிலரும் உளர் ;
உன் நிழலுடன் உறவாடவே
எனக்கு அனுமதி அளித்தாய்
சற்று தயங்கியே !
நானும் பல பெண்களை கண்டதுண்டு
சிலரே அதில் கண்ணில் பதிந்தனர் ,
நீ ஒருத்தியே என் நெஞ்சில் நிறைந்தாய் ;
உன்னை கண்ட நொடியின்
நினைவுகளை என்றுமே
நினைத்தாலே இனிக்கும் !!!
செவ்வாய், 1 டிசம்பர், 2009
சுயநினைவோடு சுயனலமானேன் !!
நான் வீழ்ந்தேனா ?
இல்லை உன் முகம்
கண்டு வியந்தேனா ?
நீ யாரென்று அறிவதில்
ஓர் ஆனந்தம் !
அதை அறிந்தவுடன்
நெஞ்சினில் பேரானந்தம் !
என் கால்கள் விரைந்தன
உந்தன் இடம் தேடி ;
என் இதயம் துடிக்கிறது
உன் நெஞ்சில் ஓர் இடம் நாடி !
நடக்கும் உன் பாதையில்
மலர் தூவ துடிக்கிறது - என் கரங்கள் ;
மஞ்சமாக தவிக்கிறது - என் நெஞ்சம் !
தாலாட்டி சீராட்டி உன்னை
கொஞ்சிடும் தாயாகவும் ,
உன் மடிமீது விளையாடி
நீ கொஞ்சிடும் சேயாகவும் ,
ஆக தான் உயிர் துடிக்குதம்மா !!
நண்பன் என்று நெகிழவில்லை ,
காதலன் என்று கர்வம் கொள்ளவில்லை ,
கணவனாக கனவு காண்கிறேன் ;
என்றாவது நீ கிடைப்பாய் என்றில்லை ,
என்றுமே நீ எனக்கே ! என்றே
கனவு கண்டு சுயநினைவோடு சுயனலமானேன் !!
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
வாழ்க்கையே கொண்டாட்டம்
எனக்கே என்னை பிடிக்கவில்லை;
உனக்கு என்னை பிடிக்கும் வரை !
வாழ்வில் என்ன செய்வது என்றிருந்தேன் ,
உன்னை காதலிக்க வைத்தாய் !
வாழ்வில் அழகை ஆராதிக்க ஆராய்ந்திருந்தேன் ;
பல்கலைக் கழகமாய் என்னை வந்தடைந்தாய் !
இனி ஆராய்ச்சி தான் எதற்கு ?
உன்னை படிப்பதெதற்கு பார்த்தே
தெரிந்து கொள்கிறேன் !
நான் கண்ட ஒரே பெண் நீ தான் !
என்று பொய் உரைக்க போவதில்லை ;
நானும் பலரை கண்டதுண்டு
காதலித்ததும் காதலிப்பதும் உன்னை மட்டுமே !
கொண்ட காதலினை நிரூபிப்பது கடினமே !
நான் செய்வேன் , என் வாழ்நாளினை
உன்னுடன் வாழ்ந்து கொண்டாடி !
ஆம் ! நீ என்னுடன் இருக்கையில்
அனுதினமும் கொண்டாட்டமே !!!
என் வாழ்க்கையே கொண்டாட்டம்,
கொண்டாடுகிறேன் !!!
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
ஏக்கம் !!!
நேரம் இல்லாமல் அலைந்தேன் !
உன்னை சந்தித்தபின்
சிந்திக்க ஏதடி நேரம் ?
உன் நினைவுகள் புதைந்ததனால்
சிதைந்தது என் மூளை !
இன்றும் ,
என்னை பற்றியே சிந்திக்க
நேரம் இல்லாமல் அலைகிறேன் !
ஆம்! உன்னை சந்திக்கும் நேரம்
மறுபடியும் வராதா ?
என்று ஏங்கியே !
