வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

சிதறல்கள்

உன்னாலே உனக்காக
உன்னால் உருவான
உலகம் - உண்மையில்
உனக்கே உனக்கில்லை
உணர்த்தும் உணர்வு
உருவாகும் உன்னாலே !

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

சிதறல்கள்

நிழலும் நிச்சயம் நில்லாது,
நிச்சயம் நிதானம் நிலைக்காமல்,
நிதானம் நிச்சயம் நிற்காமல்,
நிசமே நிலைக்க நில்லாயோ,
நித்தம் நிசமும் நிழலாய் !

திங்கள், 28 நவம்பர், 2016

நான்-நீ !



நான்,
உன்னை பற்றி எழுதுகையில்
எனக்கு  வாழ்த்துக்கள் !
நீ,
என்னை பற்றி எழுகையில்
எனக்கு வாழ்வே துகள் !

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

காக்க காக்க !!!

வருத்தம் மறக்க ! 
வார்த்தை தவிர்க்க ! 
வாதம் விலக்க ! 
வாழ்க்கை இனிக்க ! 
காக்க காக்க !!!

திங்கள், 25 ஜூலை, 2016

முயற்சி !!!

முடியாதென்று, 
சொல்கையில் 
முயற்சி தோன்றினாலும், 
கேட்கையில் 
வறட்சி தோன்றாதல் நன்று !!!

செவ்வாய், 14 ஜூன், 2016

என்னுரை!!

என்னை எனக்கு எடுத்துரைக்க
முன்னுரை தேவையில்லை !
என்னை நான் எடுத்துரைக்க
என்னுரை போதவில்லை !!

சனி, 30 ஜனவரி, 2016

நினைவில் !!!

நாம் நினைத்ததை
நடத்தப் பார்ப்பதும்,
நடந்ததை நாம்
நினைத்துப் பார்ப்பதும்,
நினைவில் நிக்கலாம் !
நிகழ்வில் நில்லாது !!

வியாழன், 21 ஜனவரி, 2016

வெறுமை !!

உன் செவிகள் அனைவரது
வார்த்தைகள் கேட்க இருப்பின்,
உன் வார்த்தைகளுக்கு
செவிகள்  தேடுவது
வெறுமை !!

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

ஆதலால்!

உள்ளம் உணர்ந்ததால்,
உருவம்  உதாசீனப்பட்டது;
புன்னகை  புரிந்ததால்,
கோபம் ஆட்கொள்ளப்பட்டது;
ஆதலால்!  உன்னால்!
என்னால்!  நம்மால்!
காதல், காமத்தை வென்றது!!!

வியாழன், 17 டிசம்பர், 2015

அனுபவம் !

சம்பாத்தியம், சாமர்த்தியம் அல்ல;
சேமிப்பே! கவனிப்பை பெறுகிறது !!!


வாழ்க்கையை!
நிகழ்வுகளும், நபர்களும்
வெறுக்கச் செய்தாலும் !
நிஜங்களும், நன்மைகளும்
ரசிக்க வைத்திடும் !!!

வார்த்தையின் வலுவும்,
துரோகத்தின் துருவும்,
அன்பினாலே ஆறும் !
அரவணைப்பில் ஆறுதல் அடையும் !!

நிறையில்லா அனைத்தும் குறையல்ல !!!

நிறைவேறாத ஆசைகளை காட்டிலும்
கேட்கப்படாத ஆசைகளே நிராசையாய்
நின்று விடுகிறது !!!

திரும்பியவர்கள் எல்லாம் திருந்தியவர்கள் இல்லை; திருந்தியவர்கள் எல்லாம் திரும்பியவர்களே !!!

என் தோல்விக்கு நானே பொறுப்பு, ஆனால் நான் மட்டுமே காரணம் இல்லை !!


சனி, 26 செப்டம்பர், 2015

தொடரும் !!!

நினைப்பதை சொல்வதும் !
சொல்வதை புரிவதும் !
புரிந்ததை அறிவதும் !
அறிந்ததை பகிர்வதும் !
பகிர்வதை தெரிவதும் !
தெரிந்ததை நினைப்பதும் ......
தொடரும் !!!

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

சகிப்பு

சிரிப்பில் சகிப்பு, 
சகிப்பின் சிரிப்பு ! 
சகிப்பில் சிரிப்பு, 
சிரிப்பின் சிறப்பு!!!

சனி, 5 செப்டம்பர், 2015

தனி ஒருவன் !!!



பெற்றவளும், எந்தன் பெருமை அறிவாள்,
என்னவளும், எந்தன் எண்ணம் அறிவாள்,
உடன் பிறந்தவளும் எந்தன் உண்மைகள் அறிவாள்,
அவரவர்  புத்தகங்களின் தலைப்பானவன் !
அவரவர் பக்கங்களில் மற்றவனானேன் !!
அறிவாளால் அறுபட்ட  தனி ஒருவன் !!!  

திங்கள், 21 ஜூலை, 2014

ஆனந்த கண்ணீர் !!!

ஆனந்தமே கண்ணீராய் !
வெற்றியின் கனம்,
தலையில்  செல்லாமல் !
தோல்வியின் ரணம்,
இதயத்தை இடித்திடாமல் !
வெற்றியை வென்றிடவும்,
தோல்வியிடம் தோற்று விடாமலும் !
உள்ளத்தின் உருக்கமான
உரையாடல் - ஆனந்த கண்ணீர் !!!

வெள்ளி, 10 ஜனவரி, 2014

சிதறல்கள் !!!

கிடைக்கும் முன் ஆசைப்படு,
கிடைத்த பின் பெருமைப்படு !!!


நினைக்க தெரிந்த மனத்திற்கு,
நினைக்காமல் இருக்க தெரிவதில்லை!!! 

கைகள்,
இணைகையில் சத்தம் சாத்தியம் இல்லை !
அடிக்கையில் சத்தம் சத்தியமே !!!

எதுவாக இருந்தாலும்,
நீ என்னுடன் இருக்கையில் 
ஏதுவாகத் தான் இருக்கும் !!! 

சந்தர்ப்பம் கடக்கும் வரை, 
கடைசி வரை அல்ல !! 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வீர நடை போட !!!

என்றென்றும்,
என் நண்பர்கள்
என் பின்னே
உடனிருக்க வேண்டும்;
என்றேனும் ,
என் முதுகில்
குத்துபவர்கள் பயந்தோட,
நட்புடன்,
நாங்கள் வீர நடை போட !!!

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சிதறல்கள் !!!

தேவைபடுவதை தேவையான அளவு வைத்துக் கொள்வோம், இஷ்டப்பட்டதை நம் இஷ்டத்திற்கு ஆசைபடுவோம் !!! 

நரம்பில்லாத மனிதனுக்கு உயிரில்லை,
நட்பில்லாத உயிர் மனிதனே இல்லை !!!
மனிதனாக்கிய நண்பர்களுக்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!


விலகிச் செல்ல ஆயிரம் பொய்கள் முன்மொழியலாம்,
விட்டுக் கொடுக்க ஒரு காரணத்தை மனம் மொழிந்திடல் போதுமானதே!


காதல் தோல்வி வார்த்தையில் அறியலாம்,
நட்பின் தோல்வி வலியிலே வெளிப்படும்... 


உடைமைகள் உடைந்தாலும்,
கடமைகளை கச்சிதமாக கடக்கையில்,
ஓர் களிப்பு !!
 
 
 

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

நிலை !!!

சந்தர்ப்பங்களில் சந்தோஷம்;
வாய்ப்புகளால் வாழ்க்கை !!
என்றானது இன்றைய நிலை !!!

திங்கள், 3 ஜூன், 2013

வலி !

ஒன்றை வேண்டாம் என்று நிராகரிப்பதால் -
 நிராகரிக்கப்பட்டதின் வலி !
ஒன்றை வேண்டும் என்று நிராகரிக்கப்படுவதால் -
நிராகரித்ததின் வலி !!

புதன், 29 மே, 2013

புதும‌னித‌னாய் !!!

வாழ்க்கையில்,
என்னை நான் ஒவ்வொரு முறை
வீழ்த்திக் கொள்ளும் போதும்,
என் வீழ்ச்சிக்கு நானே வினை;
உயிர்த்தெழுகிறே‌ன் புத்துயிருட‌ன்
புதும‌னித‌னாய் !!!