வருவதை தேடி,
இருப்பதை துறந்து,
பறக்கின்ற உலகினில்,
ஓடத் துடித்து,
நடந்து கொண்டிருக்கும்,
வாழ்க்கையடா!!!
வேடதாரி
10 ஆண்டுகள் முன்பு
சிலந்தியின் வலையினைப் போல்
சிதறல்களாய் கனவினை சேர்க்கும்
அப்பாவிகளாய் நாம் இருக்கையில்,
இருந்த இடத்தில் இறையினை
இழுத்துவிடும் தவளைகளை
மேதாவிகளாய் போற்றிடும் உலகம்!
மனம் விரும்பி இழப்பதா?
இழந்ததை நினைக்காமல் இருப்பதா?
இழந்ததை தாங்கும் சக்தியா?
புண்ணியத்தின் தேடலா?
கண்ணியத்தின் காணலா?
அளவுக்கு மிஞ்சிவிடில்
அமிர்தமும் நஞ்சாகுமே !
உந்தன் மீது நான் வைத்த
அளவினை கடந்த அன்பு
என்னுள் நான் என்ற
அகந்தையினை நசுக்கி விட்டது !
நான் வைத்த அன்பு
உந்தன் மேல் என்பதால்
அளவுகோலும் அளப்பதை மறந்தது !