திங்கள், 7 மார்ச், 2011

ஆசை !!!

த‌வ‌றை,
ம‌ற‌ப்ப‌தில் ம‌ழலையாய்;
ம‌ன்னிப்ப‌தில் பெரிய‌வ‌னாய்;
உண‌ர்வ‌தில் அறிஞ‌னாய்;
அத‌னை செய்கையில், நான் நானாய்
இருந்திட‌ ஆசை !

வெள்ளி, 4 மார்ச், 2011

இனிமை

நாவினில் உச்ச‌ரித்த‌வையெல்லாம்
மொழி என்பது ம‌ட‌மை;
நாவினை உச்ச‌ரிக்க‌ வைப்ப‌வையே
தாய் மொழியின் ம‌கிமை;
எங்க‌ள் செம்மொழியின் இனிமை !!!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உணர்வு

தொடுவ‌தால் உண‌ர்கிறோம்
நாமும் ம‌னித‌ர் என்ற‌ உண‌ர்வினை,
நீ தொட்ட‌தும் சிலையானேன்
உன்னை ம‌ட்டும் ர‌சிக்கும் உண‌ர்வினால் !!!

புதன், 9 பிப்ரவரி, 2011

நொடி

என்னை நான் ம‌ற‌க்க‌
உன்னை பார்த்த‌ ஒரு நொடி போதும் !!
அத‌ன்பின்
உன்னை நான் ம‌ற‌க்க‌
இந்த‌ வாழ்வினில் ஒரு நொடியும் இல்லை !!!

வியாழன், 27 ஜனவரி, 2011

குடிய‌ர‌சு தின‌ வாழ்த்துக்க‌ள் !!!

வெங்காய‌த்தின் விலை
வெறி கொண்டு ஏறி இருக்க‌,
எரிபொருளின் விலை
வ‌யிற்றெச்சிலை கூட்ட‌;

மாநில‌ங்க‌ளின் எண்ணிக்கை
ம‌க்க‌ள் தொகைய‌ள‌வுக்கு பெருக்கிட‌
கொதித்திடும் கொள்கைவாதிக‌ளால்,

குடிய‌மைக்க‌ க‌ஷ்டப்ப‌டும் குடிய‌ர‌சாய்
ஆள‌ப்ப‌டும் அன்னை பூமி !

குடிம‌க‌னாய் குடிய‌ர‌சு தின‌ வாழ்த்துக்க‌ள் !!!

புதன், 15 டிசம்பர், 2010

கை !!!

என்னை பெற்ற‌வளின் கையை
நான் பிடித்து ந‌ட‌ந்தேன்,
என்றும் உட‌ன் இருப்பேன்
என்று அவ‌ள் நெகிழ !

என்னை ஏற்ற‌வ‌ளின் கை
என்னை பிடிக்க‌ ந‌டந்தேன்,
என்றும் துணை இருப்பேன்
என்று அவ‌ள் ம‌கிழ‌!!!

வியாழன், 9 டிசம்பர், 2010

வாழ்க்கைய‌டா!!!

வ‌ருவ‌தை தேடி,
இருப்ப‌தை துற‌ந்து,
பற‌க்கின்ற‌ உல‌கினில்,
ஓட‌த் துடித்து,
ந‌டந்து கொண்டிருக்கும்,
வாழ்க்கைய‌டா!!!