வியாழன், 17 டிசம்பர், 2015

அனுபவம் !

சம்பாத்தியம், சாமர்த்தியம் அல்ல;
சேமிப்பே! கவனிப்பை பெறுகிறது !!!


வாழ்க்கையை!
நிகழ்வுகளும், நபர்களும்
வெறுக்கச் செய்தாலும் !
நிஜங்களும், நன்மைகளும்
ரசிக்க வைத்திடும் !!!

வார்த்தையின் வலுவும்,
துரோகத்தின் துருவும்,
அன்பினாலே ஆறும் !
அரவணைப்பில் ஆறுதல் அடையும் !!

நிறையில்லா அனைத்தும் குறையல்ல !!!

நிறைவேறாத ஆசைகளை காட்டிலும்
கேட்கப்படாத ஆசைகளே நிராசையாய்
நின்று விடுகிறது !!!

திரும்பியவர்கள் எல்லாம் திருந்தியவர்கள் இல்லை; திருந்தியவர்கள் எல்லாம் திரும்பியவர்களே !!!

என் தோல்விக்கு நானே பொறுப்பு, ஆனால் நான் மட்டுமே காரணம் இல்லை !!


சனி, 26 செப்டம்பர், 2015

தொடரும் !!!

நினைப்பதை சொல்வதும் !
சொல்வதை புரிவதும் !
புரிந்ததை அறிவதும் !
அறிந்ததை பகிர்வதும் !
பகிர்வதை தெரிவதும் !
தெரிந்ததை நினைப்பதும் ......
தொடரும் !!!

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

சகிப்பு

சிரிப்பில் சகிப்பு, 
சகிப்பின் சிரிப்பு ! 
சகிப்பில் சிரிப்பு, 
சிரிப்பின் சிறப்பு!!!

சனி, 5 செப்டம்பர், 2015

தனி ஒருவன் !!!



பெற்றவளும், எந்தன் பெருமை அறிவாள்,
என்னவளும், எந்தன் எண்ணம் அறிவாள்,
உடன் பிறந்தவளும் எந்தன் உண்மைகள் அறிவாள்,
அவரவர்  புத்தகங்களின் தலைப்பானவன் !
அவரவர் பக்கங்களில் மற்றவனானேன் !!
அறிவாளால் அறுபட்ட  தனி ஒருவன் !!!  

திங்கள், 21 ஜூலை, 2014

ஆனந்த கண்ணீர் !!!

ஆனந்தமே கண்ணீராய் !
வெற்றியின் கனம்,
தலையில்  செல்லாமல் !
தோல்வியின் ரணம்,
இதயத்தை இடித்திடாமல் !
வெற்றியை வென்றிடவும்,
தோல்வியிடம் தோற்று விடாமலும் !
உள்ளத்தின் உருக்கமான
உரையாடல் - ஆனந்த கண்ணீர் !!!

வெள்ளி, 10 ஜனவரி, 2014

சிதறல்கள் !!!

கிடைக்கும் முன் ஆசைப்படு,
கிடைத்த பின் பெருமைப்படு !!!


நினைக்க தெரிந்த மனத்திற்கு,
நினைக்காமல் இருக்க தெரிவதில்லை!!! 

கைகள்,
இணைகையில் சத்தம் சாத்தியம் இல்லை !
அடிக்கையில் சத்தம் சத்தியமே !!!

எதுவாக இருந்தாலும்,
நீ என்னுடன் இருக்கையில் 
ஏதுவாகத் தான் இருக்கும் !!! 

சந்தர்ப்பம் கடக்கும் வரை, 
கடைசி வரை அல்ல !! 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வீர நடை போட !!!

என்றென்றும்,
என் நண்பர்கள்
என் பின்னே
உடனிருக்க வேண்டும்;
என்றேனும் ,
என் முதுகில்
குத்துபவர்கள் பயந்தோட,
நட்புடன்,
நாங்கள் வீர நடை போட !!!