சிறகுகள் முளைத்ததனால்
பறந்து சென்றாயா ?
இல்லை சிகரம் தொட தானே !
உன்னை பிரியும் போது
பெரிதாய் தெரிந்த உலகம் ...
உன்னை காண
எண்ணும் போது கடுகானதே...
வேடதாரி
10 ஆண்டுகள் முன்பு
தலைவன் தலைதெறிக்க ஓடிக்
கொண்டிருந்தால் தொண்டர்களின்
தொண்டை தான் வறண்டு விடும் ,
ஆம் பின்பற்றுவதற்கு பின்னால் ஓடி ;
தலைவனுக்கு நிறம் எதற்கு ?
ஆயினும் நிதானம் நிரந்தரம் !
கடக்க வேண்டியவற்றைக் காட்டி
துவண்டு போகவிடாமல் பாதையினைக்
கடக்கும் வழிமுறையை தருபவனே தலைவன் !
தலைவன் பிறந்த நாள் கொண்டாடுவது
பரிசு பெறுவதற்கு இருக்க கூடாது ,
தனக்கு வயதாவதை சுட்டி காட்டி
அடுத்தவனை தலையெடுக்க செய்யவே !
தனக்கு பல அடிமைகளை
உருபெற செய்யாமல் தலைவர்கள்
பலரை உருவெடுக்க செய்பவன்
தலைசிறந்த தலைவன் !
மற்ற தலைமகன் எல்லாம்
தலைவன் இல்லை !
குறைகளை நிவர்த்தி செய்து ,
நிறைகளை நிலை நிறுத்தி ,
விழுதுகள் வேறாகும் போது
வேலியாய் இராமல் வழிவிட்டு ,
தொண்டனை தோண்டிப் புதைக்காமல் ,
தோழனாகத் தோள் கொடுத்து,
தலைவன் ஆக்குபவனே - தலைவன் !