செவ்வாய், 31 மே, 2011

ஊடல் !!!

ந‌ட்பினில் பிரிந்தோம் சேர்ந்தோம் சிரித்தோம்!
'உற‌வினில் பிரிந்தோம் ச‌ந்திப்போம் சிந்திப்போம் !!
ந‌ட்பினில் ஊட‌ல் த‌ண்ணீரில் க‌ல‌ந்திடும் உப்பாகும் ,
உற‌வினில் ஊட‌ல் உப்புத் த‌ண்ணீரை
சுவைப்ப‌து போல் க‌ச‌ந்து விடும் !

வெள்ளி, 20 மே, 2011

என்ன‌ வாழ்க்கை டா இது!!! - 2

க‌னா காணும் கால‌ங்க‌ள்
க‌ணிணி கால‌ம் ஆன‌து;
க‌னிக‌ள் விளைந்திடும்
நில‌மோ கால‌மான‌து;

உற‌வுக‌ள் உலோக‌மாய் உருபெற்ற‌து,
பொன்னும் பொருளும் ம‌திப்பெற்ற‌து
ம‌னித‌ர்க‌ள் ம‌திப்ப‌ற்ற‌ ம‌ர‌மாயீன‌ர்;

இணைய‌த்தின் இம்சைக‌ள்
இம‌ய‌ம் தொட்ட‌து;
மென்பொருளை க‌ற்ற‌ன‌ர்,
ம‌னித‌ நேய‌த்தை ம‌ற‌ந்த‌ன‌ர்;

வாழ்க்கையை வாழ்வோம் என்று
வாலிப‌ம் வ‌ற‌ண்டோடுது,
வாழ்ந்திடுவோம் வாழ்வினை
வென்றிடுவோம்!!!

என்ன‌ வாழ்க்கை டா இது!!!

வியாழன், 12 மே, 2011

என்ன வாழ்க்க டா இது !!!

கடந்த கனமான காலம் ,
சிந்தித்திட சிறுதளவும் சிந்தனை இல்லை,
துளி கண்ணீர் சிந்தவும் திடம் இல்லை;
பிடித்தவரை பார்த்திட இடம் உண்டு ,
பார்த்தவரை பிடித்திட வழி உண்டு ,
பிடித்ததை சொல்லிட இடம் உண்டா ?
உன் நெஞ்சினில் நடப்பதை ஏற்றிட வலு உண்டா ?
சந்தித்து பேசிட சகாக்கள் ஆயிரம் ,
சட்டையில் சில்லறை சிரமம் ,

கடக்கும் கனா காலம்
சிந்திக்குறோம் சில்லறைகளுக்கு மட்டும் ,
சட்டையில் சில்லறைகள் உண்டு ,
சந்தித்து சிறகடிக்க சகாக்கள் ஒவ்வொரு திக்கிலும் ,
பிடித்ததை சொல்லிட திடமும்
இடமும் உண்டு , நேரம் இங்கேது நமக்கு !
என்ன வாழ்க்க டா இது !!!

புதன், 13 ஏப்ரல், 2011

வாக்க‌ளிப்போம் !!!


அவ‌ நிலையா ? அவ‌ச‌ர‌ நிலையா ?
த‌மிழ் நாட்டின் த‌லைவிதியா?
த‌மிழ‌னின் த‌லையெழுத்தா?

ஈழ‌னை ஈச‌னின் கொடுத்தோம் !
நாட்டினை குள்ள‌ நரிக‌ளிட‌ம் கொடுத்தோம் !!
அர‌சிய‌ல் ஆழ்க‌ட‌லை
ச‌த்திய‌ம் செய்து சாக்க‌டை ஆக்கின‌ர் !!!

வார‌த்தில் அனைத்து தின‌த்திலும்
க‌ருப்பு நாள் அனுச‌ரிக்கிறோம்,
வ‌ருட‌த்தில் அத்துனை நாட்க‌ளும்
ஆகாம‌ல் பார்த்துக் கொள்வோம்,

வாக்க‌ளிப்போம் !!!

வியாழன், 31 மார்ச், 2011

ஆயுத‌ம் !!!

ஆய‌த்த‌மான‌வ‌னை ஆயுத‌மாக்கும்,
ஆத்திர‌கார‌னை ஆட்கொள்ளும்,
ஆத‌ர‌வ‌ற்ற‌வ‌னுக்கு ஆத‌ர‌வாகும்,

அஹிம்சை ஹிம்சையாகும் போது
அமைதி காக்க‌வும்,
ச‌ட்ட‌ம் சாக‌டிக்க‌ப்டும் போது
ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌வும்,

ஆய‌த்தமாகும் ஆயுத‌ம் !!!

செவ்வாய், 8 மார்ச், 2011

உல‌க‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்கள்...

என்னை,
ஆக்கி வைத்து, ஆள‌ வைத்து
ஆட் கொண்டிருக்கும், கொள்ள‌ போகும்
ஆர‌ம்ப‌த்தின் ஆணிவேரே,
ம‌கிமையே ம‌க‌ளிரே...
உல‌க‌ ம‌க‌ளிர் தின‌ வாழ்த்துக்கள்...

திங்கள், 7 மார்ச், 2011

ஆசை !!!

த‌வ‌றை,
ம‌ற‌ப்ப‌தில் ம‌ழலையாய்;
ம‌ன்னிப்ப‌தில் பெரிய‌வ‌னாய்;
உண‌ர்வ‌தில் அறிஞ‌னாய்;
அத‌னை செய்கையில், நான் நானாய்
இருந்திட‌ ஆசை !