புதன், 27 ஜூலை, 2011

வாகை சூடவா!!!

கண்ணில் கண்ட பாதைகள் மெய்யானதா?
கால்கள் சென்று தோற்றதால் பொய்யானதா?

கண்ணில் கண்டிடும் எழுத்துக்கள் மெய்யானதா?
செவியினில் கேட்டிடும் மெய்யின்மையால் பொய்யானதா?

கண்ட பாதையும் எழுத்துக்களும் மெய்யானதே,
வென்றிடாத பாதையில் சென்ற கால்கள் பொய்யா?
மெய்யான வார்த்தைகள் கேட்டிறாத செவிகள் பொய்யா?

சோதனைகள் அனைத்தும் சாதனைகள் ஆகிவிட்டால்
சாதனைகள் அனைத்தும் சாதாரணமே,
சரித்திரத்தில் சாதனைகள் மட்டுமே இருந்துவிடில்,
சரித்திரம் வெறும் உயிரில்லா ச‌ரீர‌ம் போலே,
பயன் ஏதுமில்லை !!!

வெற்றி என்பது மையம்
என மையம் கொள்ளாமல்,
மைற்க‌ல்லாய் கடந்து வந்து
வாகை சூடவா!!!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இய‌லாமையின் இய‌லாமை

ச‌ரித்திர‌ங்க‌ள் சாஸ்த்திர‌ங்க‌ள் ஆகையில்,
த‌ன்ன‌ம்பிக்கை த‌ட‌ம் போட்டிட‌,
ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம்பிக்கை ஊட்ட‌,
சான்றோர்க‌ள் சான்றித‌ழ் த‌ந்திட‌,
க‌ட‌மைக‌ள் க‌ண்ணிய‌த்துட‌ன் ந‌ட‌க்கையில்
இய‌லாமையால் எதுவும் இய‌லாது...

திங்கள், 18 ஜூலை, 2011

துலைத்தேன் !!!

ம‌திப்பிட்ட‌ பொருளினை அடைய‌

வாழ்வினை துலைத்தேன் உழைத்தேன்,

ம‌திப்பில்லா உந்த‌ன் புன்ன‌கையினை அடைய‌

என்னை துலைத்தேன் சிலிர்த்தேன் !

புதன், 22 ஜூன், 2011

ப‌ய‌ம‌றியான்!!!

க‌ண்க‌ள் தேடும் தூர‌த்தில் இருந்தாய்
உனை க‌ண்டு ல‌யித்த‌ன‌;
கை தொடும் தூர‌த்தில் இருக்கிறாய்
உனை க‌ண்டு ப‌ய‌ந்த‌ன‌;
நானோ இத‌னை ப‌ய‌ம் என்று அறியாத‌வ‌னாய் !!!

ஞாயிறு, 19 ஜூன், 2011

முத‌ல் முறை !!!

முத‌ல் முறை,

பிரிய‌ நினைத்தேன்,
எந்த‌ன் இமைக‌ள் உன்னை க‌ண் கொள்ள‌...

க‌ள‌வாட‌ துடித்தேன்,
உன்னை என‌க்கு...

வீழ்ந்திட‌ யாசித்தேன்,
உன்னுட‌ன் வாழ்ந்திட‌...

வாழ்ந்திட‌ நேசித்தேன்,
உன்னுட‌ன் எந்தன் வாழ்வினை...

யாசித்து நின்றேன்,
உந்த‌ன் கைக‌ள் ப‌ற்றிட‌...

நீயே என்ன‌வ‌ள் என்றுண‌ர்தேன்
உன்னை பார்த்த‌தும்...

த‌லைகுனிய‌ போனேன்
வேறு பெண்ணை பார்த்த‌தும்...

அனைத்தும் முத‌ல் முறை...
உன்னை முத‌ல் முறை பார்த்த‌தும்....

செவ்வாய், 31 மே, 2011

ஊடல் !!!

ந‌ட்பினில் பிரிந்தோம் சேர்ந்தோம் சிரித்தோம்!
'உற‌வினில் பிரிந்தோம் ச‌ந்திப்போம் சிந்திப்போம் !!
ந‌ட்பினில் ஊட‌ல் த‌ண்ணீரில் க‌ல‌ந்திடும் உப்பாகும் ,
உற‌வினில் ஊட‌ல் உப்புத் த‌ண்ணீரை
சுவைப்ப‌து போல் க‌ச‌ந்து விடும் !

வெள்ளி, 20 மே, 2011

என்ன‌ வாழ்க்கை டா இது!!! - 2

க‌னா காணும் கால‌ங்க‌ள்
க‌ணிணி கால‌ம் ஆன‌து;
க‌னிக‌ள் விளைந்திடும்
நில‌மோ கால‌மான‌து;

உற‌வுக‌ள் உலோக‌மாய் உருபெற்ற‌து,
பொன்னும் பொருளும் ம‌திப்பெற்ற‌து
ம‌னித‌ர்க‌ள் ம‌திப்ப‌ற்ற‌ ம‌ர‌மாயீன‌ர்;

இணைய‌த்தின் இம்சைக‌ள்
இம‌ய‌ம் தொட்ட‌து;
மென்பொருளை க‌ற்ற‌ன‌ர்,
ம‌னித‌ நேய‌த்தை ம‌ற‌ந்த‌ன‌ர்;

வாழ்க்கையை வாழ்வோம் என்று
வாலிப‌ம் வ‌ற‌ண்டோடுது,
வாழ்ந்திடுவோம் வாழ்வினை
வென்றிடுவோம்!!!

என்ன‌ வாழ்க்கை டா இது!!!