போகிற போக்கில்..
உன் பெயரை கடற்கரை மணலில்
எழுதினேன்!
அலைகளும் அறிந்துள்ளது
நீ எனக்கானவள் என்று ;
உன் பெயரால் பெருமை பட்ட
மணலை என்னிடம் வந்து சேர்க்கிறது!!
நான் சொல்கையில் உணர்வு,
நீ சொல்கையில் நிறைவு !
என்னில் நான் தனிமை,
என்னில் நீ அருமை !!
உன் மனதை உணர்வேன் ,
உன் சொல்லால் மகிழ்வேன் !
உனக்காக எதையும் துறப்பேன்,
என்றும் உனை மறவேன் !!!
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாழ்தல் வெல்வதற்கே !!
நான் சிதறியதை இங்கு சமர்ப்பித்துள்ளேன் இங்கு உள்ள அனைத்தும் எனது சிதறலே......
உங்கள் கருத்துக்கள் என் திறமையை வளர்த்துக் கொள்ள உதவட்டும் ...
கற்றது கை அளவு கல்லாதது உலகளவு........