திங்கள், 3 ஜூன், 2013

வலி !

ஒன்றை வேண்டாம் என்று நிராகரிப்பதால் -
 நிராகரிக்கப்பட்டதின் வலி !
ஒன்றை வேண்டும் என்று நிராகரிக்கப்படுவதால் -
நிராகரித்ததின் வலி !!

புதன், 29 மே, 2013

புதும‌னித‌னாய் !!!

வாழ்க்கையில்,
என்னை நான் ஒவ்வொரு முறை
வீழ்த்திக் கொள்ளும் போதும்,
என் வீழ்ச்சிக்கு நானே வினை;
உயிர்த்தெழுகிறே‌ன் புத்துயிருட‌ன்
புதும‌னித‌னாய் !!!

புதன், 20 பிப்ரவரி, 2013

புகைப்ப‌ட‌ம் !!!

ச‌ரீர‌ம் ச‌ந்தித்த‌ விழுப்புண்
அனைத்தையும் ப‌ட‌ம் பிடித்து வைத்தேன் ;
என் இத‌ய‌த்தில் ஏற்ப‌ட்ட‌த‌ற்கு
உந்த‌ன் புகைப்ப‌ட‌ம் வைத்தேன் !!
ப‌தற்ற‌ம் தேவையில்லை !
என் இத‌ய‌த்தின் இருப்பிட‌த்தை காட்டியுள்ளேன்!!!

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

என‌க்காக‌ நீ !!

துக்க‌த்தை ப‌கிர்ந்திருக்கிறேன்;
துக்க‌த்தில் வ‌ருந்தியிருக்கிறேன்!

புன்ன‌கைத்து ம‌கிழ்ந்திருக்கிறேன்;
புன்ன‌கையில் ம‌ய‌ங்கியிருக்கிறேன்!

தூக்க‌த்தில் இர‌சித்திருக்கிறேன்;
தூக்க‌த்தை இர‌சித்திருக்கிறேன்!

உன்னாலே நான் !
என‌க்காக‌ நீ !!

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பூமி !!!

அட‌ போடா போ பூமி
ரொம்ப‌ சிரிசு என்றிருந்தேன்,
உன்னை நினைத்த‌தும் பார்க்கையில்,

இது அக‌ண்ட‌ பூமிதான்
என்று நானும் பிர‌மிக்கிறேன்,
க‌ண்கள் அலைமோதியும்
உனை காணாத‌ போது !!!

திங்கள், 31 டிசம்பர், 2012

த‌விப்பு !!!

த‌விக்கிறேன் த‌விர்த்துக்கொள்
என்றேன்,இயலாதென்றாய்;
த‌விர்க்கிறாய், த‌விக்கிறேன்,
வாழ்வினில் இய‌லாம‌ல் !!!

வியாழன், 15 நவம்பர், 2012

தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா !!!

என‌க்கும் உன்னை பிடித்திருக்க‌ !
உன‌க்கும் என்னை பிடித்திருக்க‌ !!
நீயும் சொல்ல‌த் தான் நினைக்கிறாய்,
நானோ சொல்லாம‌ல் த‌விக்கிறேன் !
வாழ்க்கை என்னை ஆட்டிவைக்க‌ ,
கால‌த்தை நானோ க‌ட‌த்தி சென்றேன் !
தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா !!!