புதன், 11 மார்ச், 2009

உறுப்புகளின் உறுத்தல்கள்

உன்னை தேடி அலைந்தது என் கண்கள் ;

நீ என்னை கண்டதும் ஓடி ஒளிய‌ துடித்தது

என் கால்கள் பயந்து அல்ல, மறைந்து ரசிக்க ;

உன் பெயரையே உச்சரித்தது என் உதடுகள் ,

உன்னிடம் காதலை சொல்லாமல் ;

இசைக்கே இசைந்திடாத என் செவிகள் ,

உன் உதடுகளில்,

ஏதேனும் சத்தம் வெளிப்ப‌டாதா என்று ஏங்கியது ;

உன் பாதங்கள் நடந்தே நோகும் என்று ,

உன் பாதங்களை தாங்க துடிக்கிறது என் கைகள் ;

என் காலம் முழுவதும், உன்னுடன்

நடப்பதையே எண்ணுகிறது என் பாதங்கள்;

என் இதயமோ இவ்வனைதுக்கும் மேல்,

ஆம், உன்னை தவிர வேறெதையும்

ஏற்காமல் வெற்றிடம் ஆனது ;

உறுப்புகள் இப்படி உறுத்திக் கொண்டிருக்க,

இவை எதையும் சிந்திக்காமல், உன்னையே

எண்ணி செய‌லிழ‌ந்து கிடக்கிறது என் மூளை ;

11 கருத்துகள்:

Giri சொன்னது…

macha now u seem to be an expert in girl boy relation both expressing it in poetry form or funny ways or sentimental ways , now its time to explore other areas .other feelings say anger , jealousy, especially from a girl's view n all.. good going keep it up...

JSTHEONE சொன்னது…

Giri, Thanks a ton for ur comment machi.... sure i will try to work it out da.... i will try to give my best machi.... imagination la methuvaa thaan nada varum :)

sure i will try to give my best

Prasanna சொன்னது…

superb explanation.chanceless.But i felt like that comma is misplaced in below lilnes.
நீ என்னை கண்டதும் ஓடி ஒளிய‌ துடித்தது,என் கால்கள் பயந்து அல்ல மறைந்து ரசிக்க ;
if im wrong pls correct me.

JSTHEONE சொன்னது…

exactly u r right i hav corrected it thanks a lot for ur comment and suggestion :)

Unknown சொன்னது…

enna na kavithai ellam payankarama irruku..!!! kandeepa unka kitta than class varanum eppadi ponnu kala correct pandu rathunu therunchu ka..........

JSTHEONE சொன்னது…

machi karpanai panni ezhuthuradhu thaan da...jus like tat... appadi kippapdi tution vandhudadha... apuram unakku irukuradhum illama poida pogudhu... :)

thanks a lot for ur comment machi

Venkata Ramanan S சொன்னது…

உறுப்புகள் இப்படி //உறுதிக் //கொண்டிருக்க,


எண்ணி //செயலிந்தது// கிடக்கிறது என் மூளை ;

Pl crct :)

JSTHEONE சொன்னது…

done machi chk it out if i m correct

Divya சொன்னது…

வரிகள் அருமை:))

கால்கள்.......கண்கள்.....என்று ஒவ்வொரு உறுப்பாக வைத்து கவிதை எழுதியிருக்கும் விதம் மிக அருமை:))

\\உறுப்புகள் இப்படி உறுத்திக் கொண்டிருக்க,இவை எதையும் சிந்திக்காமல், உன்னையே எண்ணி செய‌லிழ‌ந்து கிடக்கிறது என் மூளை ;\

சூப்பர்!

Divya சொன்னது…

கவிதை வரிகளின் allignment கொஞ்சம் மாற்றினா.......இன்னும் ரொம்ப அழகா இருக்குமோன்னு தோனுது,

Its just my view:))

Keep writing.........u hv lots of potential:))

JSTHEONE சொன்னது…

@Divya....

THanks a lot for ur comment.. and pointing out the pick of the lot....

i will try to realign the sentence to give more appropriate touch or feel...

will try to do for sure..


thanks a lot for the encouragement...