புதன், 23 டிசம்பர், 2009

நினைத்தாலே இனிக்கும் !

ஈசனின் விளையாட்டால்
பாண்டியனுக்கு கிடைத்த பாக்கியமும்
எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால் !

உன் கூந்தலின் மணத்தை நுகர்ந்ததில்லை
ஆனால் உன் கூந்தல் என்னை உணர்ந்தது
வாயு பகவானின் திருவிளையாட்டால் !

உட்புற ஆடைகளே மேலாடையாகும்
இக்காலத்திலும் உன் தாவணி
என்னை தழுவிய போது
என் இதயமும்
என்னிடம் இருந்து நழுவியது !

காதல் என்ற பெயரால்
காண்போரை முகம் சுளிக்க
செய்யும் சிலரும் உளர் ;
உன் நிழலுடன் உறவாடவே
எனக்கு அனுமதி அளித்தாய்
சற்று தயங்கியே !

நானும் பல பெண்களை கண்டதுண்டு
சிலரே அதில் கண்ணில் பதிந்தனர் ,
நீ ஒருத்தியே என் நெஞ்சில் நிறைந்தாய் ;

உன்னை கண்ட நொடியின்
நினைவுகளை என்றுமே
நினைத்தாலே இனிக்கும் !!!

12 கருத்துகள்:

Shanthee சொன்னது…

super na..... romba azhanga iruku :)

JSTHEONE சொன்னது…

Mikka nandri :D

கலைவாணன் சொன்னது…

romance-la ungala adichukka aale illa thala..

JSTHEONE சொன்னது…

nanri nanba... edho nammala mudinjadhu... :D

beta சொன்னது…

yet another good one from u... Yaara ninaichu eludheneenga??

Barath

Meenakshi சொன்னது…

Nice imagination na :) As ever ended up in a lovely kavidhai :)

பாலராஜன்கீதா சொன்னது…

//எனக்கு கிடைக்கவில்லை உன்னாலே,
உன் நாணத்தால்//
வெட்கத்திற்கும் நாணத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் கவிஞர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார்.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
(நேற்று பொதிகையில் ஒளிபரப்பப்பட்டதிலிருந்து)

JSTHEONE சொன்னது…

@Barath thanks a lot nanba ippo thaikku en karpanaikku uruvam illa :D

JSTHEONE சொன்னது…

@Meenakshi,

Thnks a lot for ur comment and encouragement.. :D

JSTHEONE சொன்னது…

@Balarajangeetha,

Ungal vilakaththirkku nanri naanum oru penin vetkam velidum tharunamum naanam velipadum nalinathaium solla murpatten :D

Prasanna சொன்னது…

nalla kavithai. super one.
kalakkiteenga :-)

JSTHEONE சொன்னது…

@Prasanna,

Thnks a lot for ur comment and encouragement