புதன், 27 ஜூலை, 2011

வாகை சூடவா!!!

கண்ணில் கண்ட பாதைகள் மெய்யானதா?
கால்கள் சென்று தோற்றதால் பொய்யானதா?

கண்ணில் கண்டிடும் எழுத்துக்கள் மெய்யானதா?
செவியினில் கேட்டிடும் மெய்யின்மையால் பொய்யானதா?

கண்ட பாதையும் எழுத்துக்களும் மெய்யானதே,
வென்றிடாத பாதையில் சென்ற கால்கள் பொய்யா?
மெய்யான வார்த்தைகள் கேட்டிறாத செவிகள் பொய்யா?

சோதனைகள் அனைத்தும் சாதனைகள் ஆகிவிட்டால்
சாதனைகள் அனைத்தும் சாதாரணமே,
சரித்திரத்தில் சாதனைகள் மட்டுமே இருந்துவிடில்,
சரித்திரம் வெறும் உயிரில்லா ச‌ரீர‌ம் போலே,
பயன் ஏதுமில்லை !!!

வெற்றி என்பது மையம்
என மையம் கொள்ளாமல்,
மைற்க‌ல்லாய் கடந்து வந்து
வாகை சூடவா!!!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

இய‌லாமையின் இய‌லாமை

ச‌ரித்திர‌ங்க‌ள் சாஸ்த்திர‌ங்க‌ள் ஆகையில்,
த‌ன்ன‌ம்பிக்கை த‌ட‌ம் போட்டிட‌,
ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம்பிக்கை ஊட்ட‌,
சான்றோர்க‌ள் சான்றித‌ழ் த‌ந்திட‌,
க‌ட‌மைக‌ள் க‌ண்ணிய‌த்துட‌ன் ந‌ட‌க்கையில்
இய‌லாமையால் எதுவும் இய‌லாது...

திங்கள், 18 ஜூலை, 2011

துலைத்தேன் !!!

ம‌திப்பிட்ட‌ பொருளினை அடைய‌

வாழ்வினை துலைத்தேன் உழைத்தேன்,

ம‌திப்பில்லா உந்த‌ன் புன்ன‌கையினை அடைய‌

என்னை துலைத்தேன் சிலிர்த்தேன் !