வியாழன், 26 பிப்ரவரி, 2009
ஏமாற்றிவிட்டேன் - நானில்லை
கரைத்திருந்தாலும் வலியினை அறிய
வாய்ப்பில்லை - அறியவா போகிறேன் !
காகிதத்தில் காதலைக் காண்பித்தேன் ;
காற்றிலே விட்டு கருக்கி விட்டாய், என் இதயத்தினை !
உயிர் துறக்க துணிந்திருப்பேன்,
வீரனல்லவா மனதினை மாற்றிவிட்டேன் ;
என்றாவது பருவமழை பொய்த்தால் ,
விவசாயி வியாபாரியில்லை - விளைச்சல் இல்லாததால் ,
வீணாகமாட்டான் நம்பிக்கை இருப்பதால் ;
நானும் தான் - நட்பு இருப்பதால் ;
பெற்றோரே என்னுயிர் தோழர்கள் ;
பெண்ணே !
காதலியாகத்தான் கொடுத்து வைக்கவில்லை ,
நட்புடனாவது பழகு ;
ஒரு நாளாவது உன்னை நினைக்க வைப்பேன் ,
என்னவென்றா ?
' ஏமாந்து விட்டாயடி ' என்று !!!
வியாழன், 19 பிப்ரவரி, 2009
நம்பிக்கையின் சுகம் !
கருத்தினைக் கருவித்திருந்தேன் என்னுள்!
காதலில் காத்திருக்கலாம் ;
நானோ காதலிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்;
என் காதலை,நீ நிராகரித்துவிட்டால்
சாக மாட்டேன் ,ஆனால் வாழ்வதெப்படி ;
நீ என்னைக் காதலிப்பாய் என்ற
நம்பிக்கையிலே வாழ்ந்து விடுவேன்,
இதுவும் சுகம் தான் ;
புன்னகை பூவே !
இதயங்கள் இடமாறினாலும்
வெற்றிடம் ஆவதில்லை , ஊடல்கள்
இருப்பினும் உரிமை உடையாது ,
வார்த்தைகள் வராவிடினும் உதடுகளில்
பூக்கும் புன்னகை இருக்கும்,
காதல் இருப்பதால் !
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009
விழுதுகள்
விழுந்தும் போற்றப்படுகிறாய்!
விழுதே !
உன்னை பற்றி விவாதம் ஏன் ?
குடும்பச் சூத்திரம் சூளுரைத்த
சூத்திரதாரி நீ !
பாரத்தினை வெறுப்பில்லாமல்
பொறுப்புடன் பெற்றோரிடமிருந்து
பெற்றுக்கொள்ளும் பக்குவத்தினை
பிள்ளைகளுக்கு கற்றுவித்தாய் !
நன்றி சொல்லத்தான் வார்த்தை ஏது !
விழுவதும் எழுவதற்கே,
என காட்டிய எடுத்துக்காட்டு !
வாழ்வினில் விழும் முதல் அடி ,
வெற்றியின் உந்துதல் படியே !
என்றுரைத்து, வாழ்க்கைச் சிற்பத்தை
சீர்ரமைத்துடும் உழி நீயே !
உன்னை பற்றி கூற நினைத்தேன் ,
பாராட்ட முற்பட்டேன் ,
இறுதியில் நன்றி தெரிவிக்கும்
வரிகள் குவிந்தன ;
தோழமை இலக்கணம் தந்த சிற்பியே !
வள்ளுவன் கூறிய கூற்றினை ஏற்று ,
நண்பனின் இடுக்கண் கலைந்திடும்
கடமையினை கற்பித்த ஆசானே !
ஆம் ! விழுதாய் இருக்கும் நீ ,
வேறு வழுவினை இழந்ததும் ,
வேறாய் உருவினை மாற்றி ,
வாழ்ந்து கொண்டிருக்கும் வேதம் நீ !
கற்கிறேன் நாளும் உன்னிலிருந்து
நன்றி தெரிவிக்க போவதில்லை கடமைபட்டுள்ளேன் ....