வியாழன், 17 டிசம்பர், 2015

அனுபவம் !

சம்பாத்தியம், சாமர்த்தியம் அல்ல;
சேமிப்பே! கவனிப்பை பெறுகிறது !!!


வாழ்க்கையை!
நிகழ்வுகளும், நபர்களும்
வெறுக்கச் செய்தாலும் !
நிஜங்களும், நன்மைகளும்
ரசிக்க வைத்திடும் !!!

வார்த்தையின் வலுவும்,
துரோகத்தின் துருவும்,
அன்பினாலே ஆறும் !
அரவணைப்பில் ஆறுதல் அடையும் !!

நிறையில்லா அனைத்தும் குறையல்ல !!!

நிறைவேறாத ஆசைகளை காட்டிலும்
கேட்கப்படாத ஆசைகளே நிராசையாய்
நின்று விடுகிறது !!!

திரும்பியவர்கள் எல்லாம் திருந்தியவர்கள் இல்லை; திருந்தியவர்கள் எல்லாம் திரும்பியவர்களே !!!

என் தோல்விக்கு நானே பொறுப்பு, ஆனால் நான் மட்டுமே காரணம் இல்லை !!


சனி, 26 செப்டம்பர், 2015

தொடரும் !!!

நினைப்பதை சொல்வதும் !
சொல்வதை புரிவதும் !
புரிந்ததை அறிவதும் !
அறிந்ததை பகிர்வதும் !
பகிர்வதை தெரிவதும் !
தெரிந்ததை நினைப்பதும் ......
தொடரும் !!!

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

சகிப்பு

சிரிப்பில் சகிப்பு, 
சகிப்பின் சிரிப்பு ! 
சகிப்பில் சிரிப்பு, 
சிரிப்பின் சிறப்பு!!!

சனி, 5 செப்டம்பர், 2015

தனி ஒருவன் !!!



பெற்றவளும், எந்தன் பெருமை அறிவாள்,
என்னவளும், எந்தன் எண்ணம் அறிவாள்,
உடன் பிறந்தவளும் எந்தன் உண்மைகள் அறிவாள்,
அவரவர்  புத்தகங்களின் தலைப்பானவன் !
அவரவர் பக்கங்களில் மற்றவனானேன் !!
அறிவாளால் அறுபட்ட  தனி ஒருவன் !!!