வியாழன், 12 மார்ச், 2009

கட்டளை

வர்ணங்கள் உனக்கா புதிது ? வண்ணத்துப்பூச்சியே !
மலரின் மீது அமர்ந்தாய்,
வெகு நேரம் இருந்துவிடாதே,
வலி எடுத்துவிட போகிறது மலருக்கு,
என்னவள் அழகுக்கு, அழகு சேர்க்க
மலரை பறிக்க சென்றேன்;
அதன் அழகில் லயித்தவன்,
அடிமை ஆனவன்,
அத்தோட்டத்தின் காவலன் ஆனேன் !
மகரந்த சேர்க்கைக்கு,
நீயும் ஒரு காரணகர்த்தா !
அதற்கே உனக்கு இச்சலுகை ;
அமர்ந்து கொள், ரசித்துக் கொள்,
அதன் அழகினை !
இது ஓர் ரசிகனின் அன்புக்கட்டளை !

2 கருத்துகள்:

Divya சொன்னது…

\மலரை பறிக்க சென்றேன்;
அதன் அழகில் லயித்தவன்,
அடிமை ஆனவன்,
அத்தோட்டத்தின் காவலன் ஆனேன் !\


இந்த வரிகள் நல்லா இருக்கு;)

JSTHEONE சொன்னது…

@Divya,
Thanks a lot for ur comment...

varikalai koditittu kaattiyatharkku nanri....