முகத்தின் முன் கை கட்டி,
முதுகின் பின் கை நீட்டி ,
யாசகமாய் வரும் மரியாதை ,
தோழமை என்று சொல்லி
தோளிலே கை போட்டு
கழுத்தினை நெரிக்கும்
நட்புக்கு சமம் ,
கற்பில்லா நடப்பும் ,
நேர்மையில்லா மரியாதையும்
இருந்தென்ன பயன் ?
நட்பு இல்லாவிட்டால் தவறேதுமில்லை
நாமும் மனிதர்களே !
ஆனால் அன்புடன் இருக்க வேண்டும்
நாமும் மனிதர்கள் என்று
நிரூபிக்கவே !
அன்புடன் பழகி ,
ஆதரவாய் இருப்போம் !
வாழ்க மனித நேயம் !
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
3 கருத்துகள்:
ரொம்ப சிந்திக்குற போல...வாழ்க்கையில ரொம்ப அனுபவ பட்ட 50 ஒரு வயசு ஆள் மாதிரி எழுதியிருக்க... ;) :P
@Vignesh: Mikka nanri
@Vignesh: Vayasu elam aagula sir indha ulagam romba sirusu we learn soon frm ppl arnd us
கருத்துரையிடுக