திங்கள், 31 டிசம்பர், 2012

த‌விப்பு !!!

த‌விக்கிறேன் த‌விர்த்துக்கொள்
என்றேன்,இயலாதென்றாய்;
த‌விர்க்கிறாய், த‌விக்கிறேன்,
வாழ்வினில் இய‌லாம‌ல் !!!

வியாழன், 15 நவம்பர், 2012

தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா !!!

என‌க்கும் உன்னை பிடித்திருக்க‌ !
உன‌க்கும் என்னை பிடித்திருக்க‌ !!
நீயும் சொல்ல‌த் தான் நினைக்கிறாய்,
நானோ சொல்லாம‌ல் த‌விக்கிறேன் !
வாழ்க்கை என்னை ஆட்டிவைக்க‌ ,
கால‌த்தை நானோ க‌ட‌த்தி சென்றேன் !
தீதும் ந‌ன்றும் பிற‌ர் த‌ர‌ வாரா !!!

வியாழன், 8 நவம்பர், 2012

க‌ல் நெஞ்ச‌ம் !!!

எங்கோ, என்றோ !
ஒரு க‌வி சொன்னான்,
பெண்க‌ளுக்கு க‌ல் நெஞ்ச‌மென்று;
உன‌க்கும‌டி !
என் நெஞ்சில் குடி கொண்ட‌பின்
சிற்ப‌மாய் எனை சிற‌க‌டிக்க‌ வைக்கிறாய் !!

செவ்வாய், 6 நவம்பர், 2012

த‌வ‌று !!!

த‌ண்டிப்ப‌து,
உன் கைக‌ள்
எனில்,
த‌வ‌று செய்ய‌
நான் த‌வ‌றுவ‌தில்லை!!!

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஆண்ம‌க‌ன் !!!

உற்ற‌வ‌ளின் க‌ண்க‌ளின் ஓரம்
க‌சியும் க‌ண்ணீரை அறிந்து,
க‌ண்ணீருட‌ன் க‌வ‌லையும்
க‌சியுமாறு துடைத்திடும்,
ம‌க‌னே, ஆண்ம‌க‌ன் !!!

புதன், 24 அக்டோபர், 2012

மெளன‌ம் பேசிய‌தே!!!

பேசிய‌தும்,
மெளன‌ம் மெல்ல பேசிய‌து,
சொல்வ‌து அவ‌னா? அவ‌ளா?
அவ‌னும் அவ‌ளும்,
மெளன‌த்தை ப‌திலென‌,
கேள்விக‌ள் இன்றி,
காத‌லில் மெளன‌ம் பேசிய‌தே  !!!

புதன், 17 அக்டோபர், 2012

நீங்க‌ள் கேட்ட‌வை !!!

நீங்க‌ள் கேட்ட‌வை
நான் சொன்ன‌தாக‌ இருக்க‌லாம் ;
நான் சொல்வ‌து
நீங்க‌ள் கேட்ப‌த‌ற்கே !!

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

மகாக‌வியே !

மகாக‌வியே ! 
நினைவு தின‌த்தில், 
நினைக்க‌ ப‌டுப‌வ‌ன் அல்ல நீ ! 
நீ நினைத்து, 
எம்மை நினைக்க‌ வைத்த‌த‌ற்கு, 
நினைக்க‌ ப‌டுப‌வ‌ர் அய்யா நீர் !! 

புதன், 5 செப்டம்பர், 2012

அழகு !!

என‌க்கு ,
உந்த‌ன் க‌ண்க‌ள் அழ‌கு !
எந்த‌ன் க‌ண்க‌ளுக்கு .
நீ ம‌ட்டுமே அழகு !!

வியாழன், 28 ஜூன், 2012

நீய‌டி !!!

உந்த‌ன் ம‌டி;
நான் அதை நாடி;
எந்த‌ன் க‌சைய‌டி;
எனை விட்டோடி;
தேவ‌தை நீய‌டி;
பாடுவேன் நான‌டி;

வியாழன், 21 ஜூன், 2012

நிற‌ம் மாறா பூக்க‌ள் !

நிற‌ம் மாறா பூக்க‌ள் !
ந‌ம் ந‌ட்பு,
உன் சிரிப்பு,
ந‌ம் ச‌ந்திப்பு அத‌னால்
என் பூரிப்பு,
இவைக‌ள் தானோ?

புதன், 30 மே, 2012

காத‌ல்

உனக்கோ சொல்லாமல் புரியாது,
எனக்கோ சொல்லவும் தெரியாது;
புரிந்தும் ஏற்காது தெரிந்தும் சொல்லாது,
இருக்கத் தான் செய்கிறோம்;

செவ்வாய், 22 மே, 2012

நாமாவோம் !!!

இத‌ய‌த்தின் தேட‌லில் இடையூறு,
வ‌ஞ்ச‌னை நின்ற‌து வ‌ல்லூறாய் !
ச‌ந்தோஷ‌ம் சோர்ந்த‌து ச‌ங்க‌ட‌த்தில்,
ந‌ம்பிக்கை ந‌க‌ர்ந்த‌து உன்னிட‌த்தில் !
புன்ன‌கை த‌ந்த‌து புத்துண‌ர்வை,
ப‌கைமை க‌ரைந்த‌து க‌ரையின்றி,
சிற‌ப்பாய் சிற‌ந்த‌து இவ்வுல‌க‌ம்,
சிக‌ர‌ம் தொட்ட‌து என் உல‌க‌ம் !
ந‌ம‌க்காக‌ நாமாவோம் !!!

வியாழன், 17 மே, 2012

நிறை !!!

நிறைவு என்றும் நிறையாத‌து,
நிறைய‌ தேவைக‌ள் என்றேன்றும்
நிறைவேறா தேவைக‌ள் !!!

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

எங்கேயும் எப்போதும் !!!

எப்போதும் நினைத்த‌து கிடைக்காதெனினும் ;
எங்கேயும் கிடைப்ப‌தே கிடைக்கும்,
எங்கேயும் எப்போதும் ம‌கிழ்வோம் !!!

வெள்ளி, 9 மார்ச், 2012

எத‌ற்கு!!!

எண்ண‌ங்களை எரித்திட‌ எண்ணி
என்னையே எரித்தேன்,
என்ன‌வ‌ளின் எண்ண‌மில்லாம‌ல்
எந்த‌ன் எச்ச‌ம் எத‌ற்கு!!!

வியாழன், 19 ஜனவரி, 2012

வீர‌ன் !!!

கோழை,
த‌வ‌ற‌ விட்ட‌தை எண்ணி த‌விப்பான்;
முட்டாள்,
த‌வ‌ற‌ விட்ட‌தை அறியாம‌ல் நிற்பான்;
அதிர்ஷ்ட‌சாலி,
வெற்றிய‌டைந்து பின் மிதப்பான்;
வீர‌ன்,
வாழ்வின் அடுத்த‌ ச‌வாலை ச‌ந்திக்க‌ முய‌ல்வான்!!!

திங்கள், 16 ஜனவரி, 2012

த‌வ‌று ?

த‌வ‌று,

பார்ப்ப‌வ‌ரால் சொல்வ‌தா?
செய்த‌வ‌ரால் உண‌ர்வ‌தா?
வ‌குத்த‌வ‌ரால் வ‌ர்ணிப்ப‌தா?

த‌வ‌று,
செய்ததை சுட்டிக்காட்ட‌வா?
அறியாமையை அறிவுறுத்த‌வா?
செய்ய‌க்கூடாவ‌ற்றை உண‌ர்த‌வா?