என்னை அறியாமலே உன்னை
அறிவது போல் உணர்ந்தேன்;
நீ எனக்கானவள் என்பது உனக்கும்
புரிந்தது ; அது என் கனவில் தான் !
என் மனம் திறந்து காகிதத்தில்
ஆசையினை வார்த்தையாக்கி செதுக்கி
உன் விருப்பம் அறிய வந்தேன் ;
உன் அழகை பார்த்து வியந்தேன் - ஆம் உனது
மணமகள் கோல அழகை பார்த்து தான்
வேறென்ன செய்ய ?
நான் எழுதியது என்னுள் காவியம் என்றாலும்
இப்போ காகிதம் தான் அதனை
கிழித்து விட்டு வீசியெறிந்தேன்
ஆசீர்வதித்தேன் !
வேடதாரி
8 ஆண்டுகள் முன்பு
2 கருத்துகள்:
கிழித்திருக்க வேண்டாமே ... சொல்லாத காதல் என்றுமே அழகு...
காதல் அழகு அந்த காகிதம் அப்பொழுது மலை விட அதிக கனம் கொண்டது அல்லவா!
கருத்துரையிடுக