செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

உன் தோழனாக ஓர் சிந்தனை

நம் நட்பிலே ஒரு சிறு

இடைவெளி இதற்கு காரணம்

என் பணியா ? ஏதேனும் சதியா ?

இல்லை என் மதி தான் ! ஆம்.

உனக்கு தொல்லை தரக்கூடாது

என்று சொன்னது என் மதி ;

அதனை தயக்கத்துடன் உன் நலனுக்காக

ஏற்றது என் நெஞ்சம்

உனது நெஞ்சம் ஏற்காது நான் அறிவேன்

அதனிடம் உன் மதியுடன் கலந்து

உரையாட சொல் சில நிமிட

மௌனத்தில் என் நட்பை உணர்வாய்

உன் தோழனாக என்றும் !!!

5 கருத்துகள்:

க விக்னேஷ் சொன்னது…

எனக்கு இந்த கவிதையில் ஒரு சிறிய கருது வேறுபாடு உண்டு....

எப்பொழுது "தொல்லை தரக்கூடாது" என்று உன் மதி சொன்னதோ அப்பொழுதே உனக்கு அவள் மேல் உள்ள அன்பு நட்புக்கும் காதலுக்கும் இடையிலான ஒரு நிலையில் ஓர் தள்ளாட்ட நிலைமையில் உள்ளதாக புரிகிறது....

இதற்க்காக நீ உன் மதியை கசக்க வேண்டாம்....அதனிடம் உன் நெஞ்சத்திடம் கேட்டு சொல்ல சொல்....

க விக்னேஷ்.

JSTHEONE சொன்னது…

த‌ள்ளாட்ட‌ நிலை என்ப‌து ந‌ட்பு காத‌ல் ஆகும் போது ம‌ட்டும் அல்ல‌ ந‌ட்ப்பை காப்பாத்திக் கொள்ளும் போதும் வ‌ரும் அதை தான் விள‌க்கி உள்ளேன்..என‌து க‌விதையில்

க விக்னேஷ் சொன்னது…

தள்ளாட்ட நிலை என்பது "நட்பை" காப்பாற்றுவதர்க்காகவா இல்லை "காதலை" மறைப்பதற்காகவா என்ற தர்க்கத்தை நாம் பின்னால் வைத்துக்கொள்வோம்...

நான் கூறியது நீ உன் தோழிக்கு "தொல்லை தரக்கூடாது" என்று எண்ணியதை பற்றித்தான்....அந்த எண்ணத்திற்கு காரணம் என்ன....???

அதன் காரணம் தான் நான் கூறிய...."காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள" அந்த ஒரு திண்டாட்ட நிலை...

க விக்னேஷ்.

க விக்னேஷ் சொன்னது…

நடப்பில் உள்ள openness வேறு எந்த ஒரு உறவிலும் இருக்காது என்பது என் கருத்து....

அதனால் தான் "நான் பேசினால் அவளுக்கு தொல்லையாய் இருக்குமோ" அல்லது "தவறாய் என்னுவாளோ" என்ற எண்ணம் நம் மதியில் தொற்றி கொள்ளும்போதே நாம் நட்புறவில் இருந்து வேறு ஒரு உறவுக்குள் கால் வைக்க முயல்கிறோம், அல்லது நம் நெஞ்சம் முயல்கிறது, என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்....

இது எனது தனிப்பட்ட கருத்து மட்டும் தான்....இதனால் நான் உன் கருத்தை எதிக்கிறேன் என்று நீ தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம்....

peace... ;)

JSTHEONE சொன்னது…

நான் எழுதிய‌ த‌ருன‌ம் ந‌ட்பு என்ற‌ ம‌ல‌ர் ம‌ல‌ரும் த‌ரும் ஆன‌தால்.... அவ‌னுக்கு ஒர் சிறு த‌ய‌க்க‌ம் அவ்வ‌ள‌வு தான்... ந‌ட்பு என்றும் சிற‌ந்த‌தே!!!